நீங்கள் ஆன்லைன் ஜாப்பிற்கு புதியவரா ?


இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இணையத்தில் உள்ள சிறந்த ஆன்லைன் வேலை வாய்ப்புகளைக் குறித்து இந்த பதிவு உங்களுக்கு வழிகாட்டும். வீட்டிலிருந்தபடியே 0% முதலீடு இல்லாமல் நம்மால் நல்ல கணிசமான வருமானத்தை ஈட்ட முடியும். 'இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம்' என கூகிள் தேடுபொறி மூலம் தேடி நீங்கள் இங்கு வந்திருந்தால் சரியான தகவல்களைத் தான் பெற்றுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி - இணையத்தில் தேடுதல் செய்யும் போது ஏதாவது வெப்சைட் ஒரு குறிப்பிட்ட பணத்தை செலுத்திவிட்டு ஆன்லைன் வேலையில் சேரச் சொன்னால் விழிப்புடன் செயல்படுங்கள். நிறைய வெப்சைட்கள் பணத்தை நம்மிடம் இருந்து மோசடி செய்ய இவ்வாறு வலை விரிக்கின்றன. உங்கள் ஆர்வத்தைக் குலைப்பதாகவோ, அச்சமூட்டுவதாகவோ எண்ண வேண்டாம். தெளிவாக உண்மையை எடுத்துச் சொல்லுவது தான் நல்லது. நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பி இங்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு தரவேண்டியது வேலை & ஊதியம். நீங்கள் தரவேண்டியது உழைப்பு - அவ்வளவுதான். இதற்கு நடுவில் வேலையில் சேர ஒரு தொகையை செலுத்த சொன்னால் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.


தேவைகள்: 

இனி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என காணலாம் வாருங்கள். இப்பக்கத்தில் உங்களுக்கு சில அருமையான ஆன்லைன் வேலைகளும் வெப்சைட்களும் அறிமுகம் செய்து வைக்கப்படும். நீங்கள் சரியாக பயன்படுத்தி வந்தால் இத்தளம் மூலம் எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் வாழ்த்துக்கள் ...

இப்பொழுது உங்களுக்கு தேவையானவை இவைதான்
1 இணையவசதி கொண்ட ஒரு கம்ப்யூட்டர்
2 ஆன்லைன் வேலை செய்யத்தேவையான ஆர்வம்
3 PYAPAL பேபால்இணைய வங்கி கணக்கு
4 PAYZA பேசா இணைய வங்கி கணக்கு
5 PERFECT MONEY இணைய வங்கி கணக்கு
6 உங்களுக்கு என எதவாது ஒரு வங்கிகணக்கு
7 பான் கார்டு PAN CARD

இவைகளைத் தவிர முன்-அனுபவம், படிப்பு, திறன்கள் என எதுவும் தேவையில்லை. மேலே குறிப்பிட்டு உள்ள ஏழு அம்சமும் இருந்தால் போதுமானது நீங்கள் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை எளிதாக உங்கள் வங்கி கணக்கிற்கு பெற்று விடலாம் .
                                                                                                                                                                                                     
முதலில் பேபால் இணையவங்கி என்றால் என்ன? அதன் சிறப்பு அம்சங்கள் அதை தொடங்குவது எப்படி என்று பாப்போம்



(குறிப்பு: இந்த செய்தி இந்தியர்களுக்கு மட்டுமே ஏற்ற வகையில் சொல்லப்படுகிறது, எனவே, நீங்கள் வேறு நாட்டவராக இருந்தால் இதனைக் கண்டுக் கொள்ள வேண்டாம்.)

நீங்கள் ஆன்லைனில் வேலை செய்ய ஆரம்பிக்கும் போது அல்லது இணையத்தில் பணம் சம்பாதிக்க துவங்கும் போது, பணத்தை செலுத்தவோ அல்லது பெறவோ வேண்டியிருக்கும். சாதரணமாக நீங்கள் CREDIT CARD OR DEBIT CARD மூலம் பணத்தை இணையத்தில் செலுத்தலாம். ஆனால் பணத்தை பெற பேபால், கூகுள் வாலட் போன்றவற்றை பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை செய்ய உங்களுக்கு பேபால் கணக்கு மிகவும் அவசியமாகும். இந்தியாவை பொருத்தவரை வெளி நாடுகளில் இருந்து பணத்தை பெறுவது பேபால் மூலம் எளிமையாகிறது. மேலும் பேபால் உலக அளவில் அனைவரின் நம்பிக்கைக்கு உரியதாக திகழ்கிறது. நீங்கள் ஒரு வலைப்பதிவாளராக இருப்பின் பேபால் கணக்கு மிகவும் அவசியமாகும், ஏனெனில் பெரும்பாலான விளம்பர நிறுவனங்கள் பணத்தை பேபால் கணக்கு மூலமே செலுத்துகின்றனர்

                                                                                                                                                                                                      

பேப்பாலின் சிறப்பு அம்சம்கள் :




  • மிக மிக நம்பிக்கைக்குரிய, நல்ல பெயர்பெற்ற, மிகச்சிறந்த‌ இணையவங்கி. 
  • எல்லா ஆன்லைன் வேலை தளங்களும் இதனை பயன்படுத்துகின்றன. 
  • இணையத்தில் நீங்கள் சீரியஸாக சம்பாதிக்க விரும்பினால், இதில் ஒரு அக்கவுண்ட் வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு மிகவும் பயனளிக்கும். 
  • நாம் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை எளிதாக நம் பேங்க் அக்கவுண்டில் பேபால் வழியாக இந்திய ரூபாயாகவே எடுத்துக் கொள்ளலாம்

                                                                                                                                                                                                      


இந்தியர்களுக்கான தேவைகள் :


  • கண்டிப்பாக இதில் இணைய பேன் கார்டு தேவை. (இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்திய அரசாங்கம் பேன் கார்டு என்ற அடையாள அட்டையை வழங்கி வருகிறது, உங்களிடம் இல்லையெனில் எளிதாக வாங்கிக் கொள்ளலாம், இதற்கு 100/200 ரூபாய் செலவாகும்) அல்லது 
  • உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பேன் கார்டு மற்றும் பேங்க் அக்கௌன்ட் இருந்தாலும் கூட பேபால் அக்கௌன்ட் உருவாக்கலாம்
  • பேன் கார்டு மற்றும் பேங்க் அக்கௌன்ட் பெயர் ஒன்றாக இருக்க வேண்டும்
  • கண்டிப்பாக ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.

                                                                                                                                                                                                     

இந்தியர்களுக்கான வருத்தமான செய்திகள் :



  • பேன்கார்டு, வங்கி கணக்கு இல்லாவிட்டால் இதில் அக்கவுண்ட் வைத்திருக்க முடியாது. 
  • பேப்பாலில் இந்தியர்கள் பணத்தை சேமித்து வைக்க முடியாது. நீங்கள் ஆன்லைன் இணைய தளத்தில் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரும் 2 to 5 நாட்களுக்குள் உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பப்பட்டுவிடும். 
  • உங்கள் பேப்பால் கணக்கில் உள்ள பணத்தை இணையத்தில் செலவழிக்க முடியாது, உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு மட்டும் தான் எடுக்க முடியும், பேப்பாலே டாலர்களை இந்திய ரூபாயாக மாற்றி அனுப்பிவிடும்.
  • பேபால் இந்திய ரூபாயாக மாற்றி அனுப்பி வைப்பதற்காக நம்மிடம் கமிஷன் வசூலிக்கிறது, அதாவது அனுப்ப வேண்டியது 100 ரூபாய் என்றால் நமக்கு 98 ரூபாய் தான் அனுப்பும்

(குறிப்பு : ஆன்லைனில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை நீங்கள் கையில் பெற நினைத்தால் நீங்கள் வேலை செய்யும் தளங்களில் PAYPAL அக்கௌன்ட் இருக்குறதா என பார்த்து விட்டு பின்னர் வேலை செய்யுங்கள் )

                                                                                                                                                                                                    

பேப்பாலில் எப்படி அக்கவுண்ட் தொடங்குவது?


  • முதலில் www.paypal.com என்ற முகவரிக்குச் செல்லவும்.
  • Sign up என்ற பட்டனை அழுத்தவும். பின்பு கீழுள்ள படத்தைப் போல ஒரு படிவம் தோன்றும்.

  •  அதில் Individual Account கிளிக் செய்து Continue கிளிக் செய்யவும் 
  • பின்பு கீழுள்ள படத்தைப் போல ஒரு படிவம் தோன்றும்.அதில் 



  • Country India
  • Email Id உங்கள் ஈமெயில் முகவரி
  • Password கடவுச்சொல் ( Eg : Abcd1234@ ) இதை போன்று நீங்கள் விரும்பும் கடவுச்சொல்
  • Retype Password மீண்டும் கடவுச்சொல் ( Eg : Abcd1234@ ) மீண்டும் அதையே டைப் செய்து கிளிக் Continue 
  • பின்பு தோன்றுகிற படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்

  • First name: உங்கள் பேன்கார்டில் உள்ள முழு பெயர் 
  • Middle name: தேவை இல்லை . 
  • Last name: தங்கள் பேன்கார்டில் உள்ள தந்தை / கணவன் பெயர் 
  • Date of birth: பிறந்த நாள் 
  • Nationality: இந்தியா 
  • Address line 1: உங்கள் முகவரி 
  • Address line 2: முகவரிக்கான முதல் கட்டம் போதாவிட்டால், இக்கட்டத்தை பயன்படுத்தலாம். 
  • Town/City: உங்கள் ஊர் 
  • State: உங்கள் மாநிலம் 
  • PIN code: உங்கள் பின் கோடு 
  • Mobile Number: உங்கள் மொபைல் நம்பர்
இவை அனைத்தும் கொடுத்த பின்னர் கீழே உள்ள I Agree to Receive Marketing கிளிக் செய்து Agree and Create Account கிளிக் செய்யவும் .

அடுத்து வரும் விண்டோவில் நீங்கள் விரும்பினால் உங்கள் கிரடிட்/டெபிட் கார்டுகளை இணைக்கலாம் என ஒரு செய்தி வரும், ஆனால் அது தேவையில்லை.


கிளிக் I Will Link My Card Later கிளிக் செய்து Yes  Skip It  கிளிக் செய்யவும் 



இப்பொது உங்கள் பேபால் கணக்கு ரெடி கீழே சென்று Go to Your Account கிளிக் செய்யவும் 



இப்பொது பேபால் அக்கௌன்ட்க்குள் நுழைந்த பிறகு உங்கள் கணக்கு இப்படி தோன்றும் 



இதில் Notification பகுதியில் கிளிக் செய்து To Receive Payment as per Indian   Regulation  கிளிக் செய்யவும் 


அடுத்து வரும் விண்டோவில் நீங்கள் செய்ய வேண்டியது நான்கு டாஸ்க் 


நான்கு டாஸ்க் என்னவென்றால்:

  • உங்களுடைய பேன்கார்டு என்னை பதிவு செய்யவும் ( Pan card Number Enter it)
  • உங்கள் ஈமெயில் முகவரில் சென்று உங்கள் ஈமெயில் உறுதி படுத்த வேண்டும் ( Email Verification )
  • உங்கள் வங்கி கணக்கை குறிப்பிட வேண்டும் ( Add  Bank Account )
  • எதற்காக நீங்கள் ஆன்லைனில் வேலை செய்கிறோம் என குறிப்பிட வேண்டும் ( Provide Purpose Code)

முதலில் Start  என்பதை கிளிக் செய்து உங்கள் பேன்கார்டு என்னை பதிவு செய்து  Submit செய்யவும்


இப்பொது உங்கள் பேன்கார்டு Verified செய்யப்பட்டது 



இரண்டாவது உங்கள் ஈமெயில் உறுதி படுத்த வேண்டும் ( Email Verification )


நீங்கள் ரெஜிஸ்டர் செய்த ஈமெயில் முகவரியில் சென்று பேபால் Activation லிங்க் கிளிக் செய்யவும் அப்போது பேபால் லாகின் கேட்க்கும் உங்கள் பேபால் கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்யும்போது இரண்டு Security Question என ஒரு பக்கம் வரும் அதில் இரண்டு Security Question டைப் செய்து ஓகே கொடுத்தால் ஈமெயில் முகவரி Verified செய்யப்படும் 



மூன்றாவது உங்கள் வங்கி கணக்கு குறிப்பிட வேண்டும் ( Add  Bank Account )



இதில் Start என்பதை கிளிக் செய்து வரும் விண்டோவில்

உங்கள் வங்கி அக்கௌன்ட் பெயர் சேரி பார்க்கவும்
உங்கள் வங்கி அக்கௌன்ட் நம்பர் பதிவு செய்யவும்
மறுபடியும் வங்கி அக்கௌன்ட் நம்பர் பதிவு செய்யவும்
உங்கள் வங்கி IFSC Code உங்களுக்கு தெரிந்து இருந்தால் கீழே Yes கொடுத்து IFSC Code டைப் செய்து Conform கொடுத்து Review பார்த்த பின்னர் OK கொடுத்து Submit செய்யவும்

IFSC Code தெரியவில்லை என்றால் மேல குறிப்பிட்ட இடத்தில் NO கிளிக் செய்து


வங்கி பெயர்          ( BANK NAME )
மாநிலம்                  ( STATE )
உங்கள் ஊர்            ( CITY/TOWN )

வங்கி இருப்பிடம்( BANK LOCATION )

இவை அனைத்தையும் கொடுத்தால் உங்கள் வங்கி IFSC CODE கீழே தோன்றும் 

அதை செரிபார்த்து REVIEW கொடுத்து SUBMIT செய்யவும் 

இப்போது உங்கள் வங்கி கணக்கு COMPLETE செய்யப்படும்


நான்காவது எதற்காக நீங்கள் ஆன்லைனில் வேலை செய்கிறோம் என குறிப்பிட வேண்டும் ( Purpose Code)


இதில் START என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் ADVERTISING AND MARKET RESEARCH  என்பதை கிளிக் செய்து SAVE கிளிக் செய்யவும்


இந்த நான்கு டாஸ்க் முடித்த பின்னர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்து இருக்கவும் பின்னர் உங்கள் வங்கிக்கு சென்று உங்கள் வங்கி அக்கௌன்ட் கணக்கில் உங்கள் மொத்த தொகையே பதிவு செய்ய வேண்டும் .

இங்கு பேபால் அக்கௌன்ட் உங்கள் வங்கி கணக்கை சேரி பார்க்கும் எப்படி என்றால் இரண்டு சிறியே தொகையினை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்புவார்கள்

பேபால் அக்கௌன்ட்டில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு இரண்டு தொகை வரும் அது இவ்வாறு தோன்றும்




அவர்கள் எனக்கு அனுப்பிய  தொகை 1.11 , 1.08 இதை போல் உங்களுக்கு என இரண்டு தொகை வரும்

பின்னர் உங்கள் பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்து உங்கள் பெயருக்கு கீழே CONFORM BANK ACCOUNT என தோன்றும் அதில் கிளிக் செய்து வரும் விண்டோ இப்படி தோன்றும்


இதில் பேபாலில் இருந்து  நமது வங்கி கணக்கிற்கு வந்த இரண்டு தொகை கொடுத்து CONFIRM கிளிக் செய்யவும் .

அடுத்து  அதே பகுதியில் உங்கள் மொபைல் என்னை கொடுத்து Conform செய்யவும்


இதில் உங்கள் மொபைல் என்னை டைப் செய்து Conform கொடுத்தால் உங்கள் மொபைல் நம்பர்க்கு  ஒரு SECRET கோட் வரும் அதை டைப் செய்து VERIFY செய்யவும்

இப்போது உங்கள் பேபால் அக்கௌன்ட் 80% சதவீதம் முடிந்த நிலையில் இவ்வாறு தோன்றும்



இதில் உங்கள் CREDIT/DEBIT இணைக்க தேவை இல்லை . அப்படி இணைக்க நினைத்தால்  இணைத்து கொள்ளலாம் . இன்வெஸ்ட்மென்ட் செய்யும் தளங்களில் பேபால் அக்கௌன்ட் ஐடி உபயோகிக்கலாம் .

அவ்ளோ தான் இப்பொது உங்கள் பேபால் அக்கௌன்ட் தயாராகி விட்டது


ஆன்லைனில் நீங்கள் சம்பாதித்த பணம் பேபால் கணக்கை அடைந்தவுடன் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுடைய பணம் அன்றைய தேதியில் டாலரிலிருந்து ரூபாயாக மாற்றப்பட்டு அந்த பணத்தை உங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றுவதற்கான செயல்பாடுகள் நடைபெறும். இது நமது நாட்டின் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பேபால் நிறுவனத்திற்கு இட்ட கட்டளையாகும். மேலும் குறைந்தபட்சம் 2 லிருந்து 5 நாட்களுக்குள் உங்களுடைய பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். அதுமட்டுமின்றி உங்களுடைய பேபால் கணக்கில் குறைந்தபட்சம் 10$ இருந்தால் நீங்களாகவே அதனை உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த பணமும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு வந்துசேர 3 லிருந்து 5 நாட்களாகும்.


குறிப்பு :

இங்கு பேபால் அக்கௌன்ட்டிற்கு என எந்த ஒரு அக்கௌன்ட் நம்பரும் கிடையாது .நீங்கள் லாகின் செய்யும் மெயில் ஐடி தான் பேபால் கணக்கின் அக்கௌன்ட் நம்பர் OR ஐடி ...

பேபால் அக்கௌன்ட்டினை தொடர்ந்து பேசா அக்கௌன்ட் தொடங்குவது எப்படி என்று பாப்போம்








No comments:

Post a Comment